ETV Bharat / state

தண்ணீர்... தண்ணீர்... அலட்சியப்படுத்திய ஊராட்சி: கொந்தளித்த பொதுமக்கள்!

திருச்சி: மணப்பாறை அடுத்த கருமலைப் பகுதியில், பொது தண்ணீர் குழாய் அமைத்து தரக்கோரி, பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Insufficient water pipeline, the public road rage protesting the inadequacies

author img

By

Published : Jun 13, 2020, 4:11 AM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கருமலை ஊராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டு பகுதியில் ஊராட்சி மூலம் வழங்கும் உப்புத் தண்ணீரை, தனி நபர் குழாய் இணைப்பு பயனாளிகளில் ஒரு சிலர், மின்மோட்டார் மூலம் உறிஞ்சிவிடுவதால், பெரும்பாலான குடும்பங்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுத்து ஊருக்குப் பொதுவான நான்கு இடங்களில் தண்ணீர் குழாய் வசதி ஏற்படுத்தி, அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யக்கோரி, கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால், இரண்டாவது வார்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காமல், ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் பிடித்துச் செல்லும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதனால், ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் சாமித்துரை சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம், பேசி, கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.