இந்தோ-நேபாள் கிராமப்புற இளைஞர்களுக்கான 2020-21ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நேபாளில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர் சந்தோஷ் (19) - சத்யபாமா பல்கலைக்கழக மாணவர் தர்ஷன் குமார் இணை தங்கப்பதக்கம் வென்றது.
இந்தோ - நேபாள் பேட்மிண்டன் தொடரில் திருச்சி மாணவர் சந்தோஷ் வெற்றி பெற்றதையடுத்து, திருச்சி தேசிய கல்லூரி நிர்வாகிகள், முதல்வர் சுந்தரராமன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மாணவர் சந்தோஷின் தந்தை ரமேஷ் குமார், தாய் ஆனந்தி இருவரும் குவைத்தில் பணியாற்றுகின்றனர். திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சந்தோஷ் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: சிவகாசியில் மாநில அளவிலான தடகளப் போட்டி; வீரர், வீராங்கனைகள் ஆர்வம்!