கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதையடுத்து மத்திய அரசு நிபந்தனைகளுடன் மே 25ஆம் தேதிமுதல் விமான சேவை செயல்பட அனுமதியளித்தது.
அதன்படி, திருச்சியில் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூருவுக்கு உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதனால் நேற்று காலை திருச்சியிலிருந்து சென்னை செல்ல வேண்டிய இரண்டு விமானங்களுக்குப் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக அந்த இரண்டு விமானங்களும் ரத்துசெய்யப்பட்டன.
அதனால் நேற்று இரவு பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானமும் ரத்துசெய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி நேற்று இரவு 9:05 மணிக்கு இண்டிகோ விமானம் 71 பயணிகளுடன் பெங்களூருவிலிருந்து திருச்சி வந்து மீண்டும் 60 பயணிகளுடன் பெங்களூருவுக்கு புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: சென்னையில் 2ஆவது நாளாக 39 விமான சேவைகள் இயக்கம்