ETV Bharat / state

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது!

திருச்சி: தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

In Trichy snatching thief arrest under goondas act
In Trichy snatching thief arrest under goondas act
author img

By

Published : Dec 6, 2019, 12:16 PM IST

திருச்சி மாநகர அமர்வு நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம் செல்வாநகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஆரோக்கியசாமி. இவரது மனைவி இம்மாக்குலேட் எழிலரசி. இவர் திருச்சி சோழன் நகர் சித்திரை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு இவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது திருச்சி ராமலிங்க நகர் அவ்வையார் புரத்தைச் சேர்ந்த புஜ்ஜி என்கிற இம்ரான்(26) என்பவர் இம்மாகுலேட் எழிலரசியை பின்புறமாகத் தாக்கி ஒன்பது பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். அப்போது கீழே விழுந்த எழிலரசி காயமடைந்துள்ளார்.

இதுகுறித்து, குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இம்ரானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்து. இதையடுத்து புஜ்ஜி என்கிற இம்ரானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜூ உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் காவல் துறையினர் இம்ரானை குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க... தெலங்கானா என்கவுண்டர் தொடர்பான செய்திகள் உடனுக்குடன்...

Intro:தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.Body:

திருச்சி:
தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாநகர அமர்வு நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம் செல்வாநகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் ஆரோக்கியசாமி. இவரது மனைவி இம்மாக்குலேட் எழிலரசி. இவர் திருச்சி சோழன் நகர் சித்திரை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 4ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி ராமலிங்க நகர் அவ்வையார் புரத்தை சேர்ந்த புஜ்ஜி என்கிற இம்ரான்(26) என்பவர் இம்மாகுலேட்டா எழிலரசியை பின்புறமாக தாக்கி 9 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார். இதில் கீழே விழுந்த இமாக்குலேட் எழிலரசி காயமடைந்தார்.

இது குறித்து அமர்வு நீதிமன்ற குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இம்ரானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இம்ரான் மீது திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பல நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புஜ்ஜி என்கிற இம்ரானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜூ உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் போலீசார் இம்ரானை குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.