ETV Bharat / state

திருச்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ஆடை அலங்கார போட்டி! - திருச்சி மாவட்ட செய்திகள்

International Disabilities Day: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்டும் வகையில் சிறப்பு குழந்தைகளுக்கான மாநில அளவிலான ஆடை அலங்கார போட்டியும், ஒப்பனை கலைஞர்களுக்கான போட்டியும் நடைபெற்றது.

in Trichy occasion of International Disabilities Day state level dress up competition for special children
திருச்சியில் நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான மாநில அளவிலான ஆடை அலங்கார போட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 7:32 PM IST

திருச்சி: மாற்றுத்திறனாளிகள் தினம் என்பது சிறப்புத் திறன்களைக் கொண்ட மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை நினைவுகூறும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஊக்குவிக்கப்படும் ஒரு அனுசரிப்பு ஆகும். ஆண்டுதோறும் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்படும் மாற்றுத்திறனாலிகள் தினம், முதன்முதலில் 1992இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் 47/3 மூலம் அறிவிக்கப்பட்டது.

திருச்சியில் நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான மாநில அளவிலான ஆடை அலங்கார போட்டி

மேலும், ஊனமுற்றோர் பிரச்சனைகள் பற்றிய புரிதலை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் நிகழ்ச்சி நிரல் ஆதரவைத் திரட்டுவதாகும், எனவே சவாலுக்குட்பட்ட தனிநபர்களுக்கு கண்ணியம், சம உரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றை உறுதியளிக்க முடியும்.

மேலும், சமூக, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்புத் திறனாளிகளின் ஒருங்கிணைப்பிலிருந்து பெறக்கூடிய ஆதாரங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நிகழ்வு முயற்சிக்கிறது. மேலும், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தின் கருப்பொருளை 'உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உருமாற்றத் தீர்வுகள்' என ஐ.நா தீர்மானித்துள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அரசால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக என் இந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் மாற்றுத்திறனாளிகள் என யாரும் குறை கூறக்கூடாது என்பதற்காக தேசிய அளவிலான மற்றும் உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, இந்திய அரசாங்கம் அவர்களை ஊக்குவிக்கப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசும் மற்றும் பல்வேறு தன் ஆர்வலர் தொண்டு அமைப்பும் மாற்றுத்திறனாளிக்கான நிதியை திரட்டுவதற்கும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளால் கிடைக்கும் வருமானத்தை மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் REHABINDIA CHARITABLE TRUST சார்பாக உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒப்பனை கலைஞர்களுக்கான மாநில அளவிலான போட்டியும், சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்காரம் போட்டியும் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்கள் கலந்து கொண்டு 45 நிமிடங்களில் மணப்பெண் அலங்காரம் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட இந்த போட்டியின் மூலம் வரும் நிதியை திரட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்படும் என தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மனதின் குரல் நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த தொழிலாளியை பாராட்டிய பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.