ETV Bharat / state

விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்! - தொடர் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

In Trichy Farmers Continuous hunger strike
In Trichy Farmers Continuous hunger strike
author img

By

Published : Jan 2, 2020, 12:33 PM IST

  • விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,
  • நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும்,
  • வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாயமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும்,
  • காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்புத் திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்புத் திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும்,
  • கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
  • இடுக்கி மாவட்டத்தை கேரளாவிலிருந்து பிரித்து தமிழ்நாட்டுடன் இணைத்து முல்லைப் பெரியாறு பிரச்னை, 58ஆம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது.

திருச்சி ஜங்சன் அருகே நடைபெறும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமம் போட்டு உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இந்தப் போராட்டம் இன்றுமுதல் வரும் எட்டாம் தேதிவரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க...சென்னையில் பட்டப்பகலில் வீட்டில் நுழைந்து செல்போன் திருட்டு

Intro:கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.Body:திருச்சி:
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும். வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து பிரித்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க வேண்டும். தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட வேண்டும்.
10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது லாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடங்கியது.
திருச்சி ஜங்சன் அருகே நடைபெறும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமும் போட்டு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த போராட்டம் இன்று முதல் வரும் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.