சென்னை கொரட்டூரில் அபு உசேன் என்பவர் தனது நண்பர்கள் சிலருடன் வாடகை வீட்டில் வசித்துவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நண்பர்கள் இருவர் வேலைக்கு சென்றுள்னர்.
இந்த நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மற்ற நண்பர்கள் எழுந்து பார்த்தபோது மூன்று செல்போன்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல் துறையினர் அங்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் வந்துள்ளனர். ஒருவர் இறங்கி சாவகாசமாக அபு உசேன் தங்கியிருந்த வீட்டிற்குள் சென்று கதவை திறந்து அங்கிருந்த மூன்று செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர். இந்த காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
கொரட்டூரில் பட்டப்பகலில் செல்போன் திருட்டுபோன சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லாரி பேட்டரிகள் திருட்டு: சிசிடிவி காட்சியின் மூலம் விசாரணை!