திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைப்பட்டியில், சாமியார் ஒருவரை பார்த்து குறி கேட்க வந்தவர், திரும்பி செல்லும் வழியில் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரது ஆதார் அட்டையில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உறவினர்ளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் தேத்தாம்பட்டியைச் சேர்ந்த பொன்னன் (84) என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது கொலையா? அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.