ETV Bharat / state

ஆசனவாயில் மறைத்து ரூ.10 லட்சம் தங்கம் கடத்தல்: திருச்சியில் சிக்கிய 'குருவி'

திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 75 ஆயிரத்து 499 மதிப்புள்ள 161 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 12, 2023, 7:50 PM IST

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தற்போது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து நேற்று (ஜூன் 11) வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வருகை தந்த பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு (Airport Air Intelligence Wing Customs Officers) ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தனி தனியாக அதிரடி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் ஆண் பயணி ஒருவரை சோதனை செய்த போது அவரது ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட கடத்தல் தங்கம் சிக்கியது. அவர் கடத்தி வந்த தங்கம் 161 கிராம் எடை என்றும் அதன் இந்திய மதிப்பு ரூபாய் 9 லட்சத்து 75 ஆயிரத்து 499 என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த நபரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், தங்க கடத்தலில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? அவர் மீது வேறு வழக்குகள் உள்ளதா? இவருக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள்? எந்த நோக்கத்திற்காக தங்கங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி செல்கின்றனர்? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதனை அடுத்து விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள், அறியவகை பறவைகள், உயிரினங்கள் கடத்தி வரும் சட்டவிரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: 15 வருடங்களாக போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.