திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் அலியார். இவரது மகன் அப்துல் வாஹித் (வயது 12). 6ஆம் வகுப்பு படித்து வருகின்றான். சமீபகாலமாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து சென்ற அப்துல் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அலியார் 6ஆம் தேதி அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். சில காலமாக அப்துல் வாஹித் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ரவுடி கும்பலுடன் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலின் பேரில் காவல் துறையினர் இளவரசன் (18), சரவணன் (19), லோகேஷ் (16), வீராசாமி (16) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள பன்றி பண்ணைக்கு அப்துல் வாஹித்தை அழைத்துச் சென்று, தன்பாலின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியது தெரிய வந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்த அப்துல் வாஹித்தை அடித்துக் கொலை செய்து, அரியமங்கலம் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் சிறுவனின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். உடலை மீட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் தன்பாலினச் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக, 6ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: உரிமைகள் உனக்கானது: யாரும் கொடுக்கவோ, எடுக்கவோ முடியாது... உயிரியாய் இவ்வுலகில் உலாவருவோம்!