ETV Bharat / state

திருச்சியில் கரும்பு லாரி விபத்து: கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்சியில் அதிக பாரம் ஏற்றிவந்த கரும்பு லாரியின் டிப்பர் உடைந்து, கரும்புகள் அனைத்தும் சாலையில் கொட்டியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சியில் கரும்பு லாரி விபத்து; கடும் போக்குவரத்து நெரிசல்

author img

By

Published : Feb 25, 2022, 10:41 PM IST

திருச்சி: புதுக்கோட்டையின் அய்யாவயலிலிருந்து, லால்குடி காட்டூர் கரும்பு சர்க்கரை ஆலைக்கு ரமேஷ் என்பவர் கனரக லாரி ஒன்றை இயக்கிவந்துள்ளார். லாரி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே வந்துகொண்டிருந்தபோது, பாலத்தின் வளைவில் லாரியை வளைக்க முடியாமல் ஓட்டுநர் சிரமப்பட்டுள்ளார். அப்போது அதிக அளவு பாரம் காரணமாக லாரியின் டிப்பர் உடைந்து சாலையில் கரும்புகள் கொட்டின.

அப்பகுதி அதிக போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையில் கொட்டிய கரும்புகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே போக்குவரத்து சீரானது.

இதனையடுத்து அதிக பாரம் ஏற்றிவந்ததாக லாரி ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தால் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதன் காரணமாகவே விபத்துகளைத் தவிர்க்க இயலும் எனப் பொதுமக்கள் காவல் துறைக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வீடியோ: ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் லெவலுக்கு ஆட்டோ ரேஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.