ETV Bharat / state

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி - மணப்பாறை

திருச்சி: திடீரென பெய்த கனமழையால் மணப்பாறை பிரதான சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

File pic
author img

By

Published : Jun 8, 2019, 10:24 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. .இதனையடுத்து நகரில் உள்ள பிரதான சாலையில் கழிவு நீரோடு மழைநீர் கலந்து ஓடி ஆறு போல் காட்சியளித்தது.

இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நகராட்சி நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் கழிவு நீரோடு கலந்து மழைநீர் தேங்குவதாகவும்,பிரதான சாலையில் தேங்கும் மழைநீரை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கை கடைபிடிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

Intro:மணப்பாறையில் பிரதான சாலையில் தேங்கிய மழைநீர் - அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் திடீர் கனமழை பெய்தது.இதனையடுத்து பெய்த கனமழையால் சாலைகளில் நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.இந்நிலையில் சாலையில் ஓடிய மழைநீர் கழிவு நீரோடு கலந்து மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு உள்ள பிரதான சாலையில் தேங்கி ஆறு போல் காட்சியளித்தது.இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை விட்டு அரை மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அரைமணி நேரமாகியும் நகராட்சி நிர்வாகம் மழைநீர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது தான் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மாற்று வழியாக பேருந்து நிலையத்தை பயன்படுத்தத் தொடங்கினர்.மேலும் இதுபோல் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் இவ்வாறு கழிவு நீரோடு கலந்து மழைநீர் தேங்குவதாகவும்,பிரதான சாலையில் தேங்கும் மழைநீரை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கை கடைபிடிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.