ETV Bharat / state

'நிபா வைரஸை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை...!' - Neet Exam

திருச்சி: நிபா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில் தெரிவித்தார்.

c.vijayabaskar
author img

By

Published : Jun 6, 2019, 2:37 PM IST

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். செய்தியாளர்களின் கேள்விகளும், அமைச்சரின் பதில்களும்...

மழைக்காலம் தொடங்கும்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

  • தொடர்ந்து மழைக்காலமாக உள்ளதால், தட்பவெப்பநிலை மாறும்போது நோய் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக வடமாநிலங்கள், அண்டை மாநிலங்களில் நிபா போன்ற வைரஸ் தாக்குதல் இருக்கிறது. தமிழ்நாட்டில் அது இல்லாத நிலையை உருவாக்குவதும், அதை உறுதிப்படுத்தவும் தொடர் நடவடிக்கை எடுத்துவருகிறோம். இன்றைக்குக்கூட மருத்துவ இயக்குநர் வடிவேலு தலைமையில் 7 மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவக் குழு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதில் காய்ச்சலுடன் கேரளாவில் இருந்து தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு வரக்கூடியவர்களை பரிசோதனை செய்வதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் எவ்விதமான காய்ச்சல் என்றாலும் உடனடியாக முடிவுகள் கண்டிப்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் நிபா வைரஸ் எளிதில் நுழைந்துவிடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் மூலம் கடிதம் எழுதப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பொதுமக்கள் பழங்கள், காய்கறிகளை கழுவாமல் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

மருத்துவ கவுன்சிலிங் கடந்தமுறை நடந்தததைப்போலவா? அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமா?

  • மருத்துவ கவுன்சிலிங் விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கவுன்சிலிங்கை பொறுத்தவரை எப்போதும்போல பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடக்கும்.

நீட் தேர்வில் அதிக அளவில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத விவரம் குறித்த புள்ளி விவரங்கள் என்ன?

  • நீட் தேர்வில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் விவரம் குறித்த புள்ளி விவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அது வந்தவுடன் விவரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனரே... என செய்தியாளர்கள் கேள்வி முடிப்பதற்குள் விஜய பாஸ்கர் அவ்விடத்திலிருந்து வேகமாக நழுவிச் சென்றார்.

Intro:திருச்சி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Body:திருச்சி: நிபா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மழைக்காலமாக இருந்தாலும் சிறுமி கற்பழிப்பை மாறும், தட்ப வெட்ப நிலை மாறும் போது நோய் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு எழும். அதனால் தான் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக வடமாநிலங்கள், அண்டை மாநிலங்களில் நிபா போன்ற வைரஸ் தாக்குதல் இருக்கிறது. தமிழகத்தில் அது இல்லாத நிலையை உருவாக்குவது, அதை உறுதிப்படுத்த தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்றைக்கும் மருத்துவ் இயக்குனர் வடிவேலு தலைமையில் 7 மாவட்டங்களில்ம் நடமாடும் மருத்துவ குழு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு வரக்கூடியவர்களை பரிசோதனை செய்வதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கடுமையான பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் எவ்விதமான காய்ச்சல் என்றாலும் உடனடியாக முடிவுகள் கண்டிப்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் குறித்த சந்தேகங்கள், கேள்வியில் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.அதற்கு பதிலளித்து கொண்டிருக்கிறோம். நிபா வைரஸ் எளிதில் நுழைந்துவிடாமல் தேவையான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலாளர் மூலம் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கால்நடைத்துறை உடன் இணைந்து பணியாற்றுகின்றனர். பொதுமக்கள் மற்றும் பழங்களை கழுவாமல் சாப்பிட வேண்டும். காய்கறிகளையும் கழுவாமல் சாப்பிட கூடாது. கவுன்சிலிங் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வெப்சைட்டில் இருந்து நாளை முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதற்கான விவரங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். கவுன்சிலிங் பொறுத்தவரை எப்போதும் போல மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேரடியாக நடக்கும். இதை கவனமாக நடத்த வேண்டி இருப்பதால் மூன்று நாட்களுக்கு பின்னர் நடத்தப்படும். நீட் தேர்வில் அதிக அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத குறித்து புள்ளி விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை அது வந்த உடன் விபரங்கள் வெளியிடப்படும் என்றார்.

Conclusion:நாளை முதல் ஆன்லைனில் கவுன்சிலிங் என்ன பண்ற டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.