ETV Bharat / state

"மூத்த அமைச்சர்கள் ஒவ்வொருவராக சிறை செல்வார்கள்" - ஹெச்.ராஜா பேட்டி! - PM Modi at trichy

BJP H.Raja Byte: பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழ்நாடு பாஜக சார்பில் திருச்சியில் இன்று (ஜன.2) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜக செல்வாக்கு அதிகரித்து விட்டதாகவும், தமிழ்நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழ்நாடு பாஜக சார்பில் ஆலோசனைக்கூட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 9:31 PM IST

Updated : Jan 2, 2024, 10:37 PM IST

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழ்நாடு பாஜக சார்பில் ஆலோசனைக்கூட்டம்

திருச்சி: பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழ்நாடு பாஜக சார்பில் திருச்சியில் இன்று(ஜன.2) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டைப் பொறுத்தவரைப் பிரதமர் வரும்போதெல்லாம் மக்கள் நலனுக்காகப் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் திட்டங்களைத் துவங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் ரூபாய் 11 லட்சம் கோடி மதிப்புக்கான திட்டங்களைத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.

இன்று (ஜனவரி 1) திருச்சியில் புதிய விமான நிலையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமருக்கு மிகப் பிரம்மாண்டமான அளவிலான எழுச்சி வரவேற்பினை பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கொடுத்திருக்கின்றனர். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கூட்டமானது தேர்தலில் பூத் கமிட்டி என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் மத்திய அரசினுடைய 43 கோடி பயனாளிகளைப் பட்டியலிட்டு, அவர்களை நேரடியாகச் சந்தித்து வருகின்ற தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களிப்பது போன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் வரவேற்பிற்கு வழக்கத்தை விட அதிகமாகக் கூட்டம் இருப்பது அரசியலில் மாற்றம் நிகழ்ந்து வருகிறதை எடுத்து காட்டுகிறது. தென் மாவட்ட வெள்ள பாதிப்பில் அரசின் செயல்பாடுகளில் பொது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. பிரதமர் வருகை முன்னிட்டு வணக்கம் மோடி என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்படுகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் பேசும் போது கோஷம் எழுப்பப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரின் பாதுகாப்பிற்காகப் புதிதாக வாகனங்கள் வாங்குவது என்பதில் என்னுடைய தலையீடு இல்லை. ஆனால், வெள்ள பாதிப்பு குறித்த ஆய்விற்காக மத்திய அமைச்சர் தமிழ்நாடு வந்தபோது தமிழ்நாடு அரசு கொடுத்த அறிக்கையின்படி 42% முடிவடைந்தது எனக் கூறியுள்ளனர். ஆனால், பொதுமக்களிடம் 92 சதவீதம் பணிகள் முடிவடைந்தது எனக் கூறியுள்ளனர். தமிழ்நாடு ஊழலில் மூழ்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனை திருச்சியில் நடைபெறும் என ஏற்கனவே நீங்கள் கூறியது பற்றிய கேள்விக்கு, "77ஆம் ஆண்டு சர்க்கரை என்ன ஆயிற்று என்றால் எறும்பு தின்று விட்டது என்றும் சாக்கு எங்கே என்று கேட்டால் கரையான் தின்றுவிட்டது என்று கூறி ஊழல் செய்தனர். ஆனால், எங்கள் அமைச்சர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை என மாறு தட்டிக் கொண்டனர். இதையடுத்து தற்போது, ஒவ்வொருவராக மாட்டிக் கொண்டு வருகின்றனர். பொன்முடியைச் சுபமுகூர்த்தத்தில் வழி அனுப்பி வைத்துள்ளோம். இதே போல் அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் உள்ளே போவார்கள். ஆனால், திருச்சி இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்று மறைமுகமாகச் சாடினார்.

இதையடுத்து இன்று ஓபிஎஸ் மற்றும் பிரதமர் சந்திப்பு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ்-ம் இருக்கிறார். அதன் அடிப்படையிலே இன்று ஓபிஎஸ் பிரதமரைச் சந்தித்தார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் ரூ.120 லட்சம் கோடி.. தமிழ்நாட்டிற்கு வரலாறு காணாத நிதி - பிரதமர் வெளியிட்ட பட்டியல்!

Last Updated : Jan 2, 2024, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.