திருச்சி: புத்தாநத்தத்தை அடுத்த தோப்புபட்டியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகள் சத்யபிரியா (17) நேற்று (டிசம்பர் 29) மாலை தனது பாட்டி செல்லம்மாளுடன் தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றிருந்தார்.
இவர்கள் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கிணற்றிற்கு சென்று பார்த்தனர். அங்கு இருவரும் கிணற்றுக்குள் மூழ்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் மூழ்கிய இருவரையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Stealing mobile phone: துணிக்கடையில் செல்போன் திருடிய தம்பதி: சிசிடிவி காட்சி வெளியீடு