திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சி வழியாக தங்கம் கடத்தப்படும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர் கொண்டு வந்த கிரைண்டரில் 347 கிராம் எடை கொண்ட சுமார் ரூ.18.55 லட்சம் மதிப்பிலான உருளை வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரிசம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் யூரியா, உரம் தட்டுப்பாடு.. விவசாயிகள் குமுறல்!