திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லவிருந்த ஏர் ஏசியா விமானப் பயணிகளை, வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
இச்சோதனையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத், அப்துல் ரகுமான் ஆகிய இருவரின் உடைமைகளில் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 402 கிராம் கடத்தல் தங்கம் உள்ளிட்டவைகள் சிக்கின.
மேலும், அவர்களிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 லேப்டாப்கள், 300 கைக் கடிகாரங்களும் இருந்தன. இதனைத்தொடர்ந்து, வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள், அவற்றை பறிமுதல் செய்துவிட்டு, இதுகுறித்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
அயன்' பட பாணியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திய இளைஞர் கைது