திருச்சி: ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளின் உடமைகளைச் சோதனை செய்யும் பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்ட இருவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தார்.
தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவரது உடலில் மறைத்து தங்கம் கடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து ரூ. 46.37 லட்சம் மதிப்பிலான 846.500 கிராம் எடைகொண்ட கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
மேலும் இவர்களிடம் தங்கத்தைக் கொடுத்து அனுப்பியது யார், யாருக்காகத் தங்கத்தைக் கடத்திவந்தனர் என அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி தங்கம் விற்க முயன்ற வடமாநில நபர்கள் கைது: அம்பலமானது எப்படி?