மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் மறைத்து எடுத்துவந்த ரூ. 1.08 லட்சம் மதிப்புள்ள 216 சிகரெட் பாக்கெட்டுகளையும் , ரூ. 9.54 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் எடையுள்ள 19 ஜோடி தங்க காதணிகளையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 10 லட்சத்து 62 ஆயிரத்து 858 ரூபாய் எனக் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அப்துல் ரகுமானிடம் அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விமானத்தின் கழிவறையில் கேட்பாராற்று கிடந்த 5.5 கிலோ தங்கக்கட்டிகள்!