ETV Bharat / state

குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் கண்காட்சி - திருச்சியில் தொடக்கம்

திருச்சி: மாநகராட்சி சார்பில் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் உபகரணங்களின் கண்காட்சி திருச்சியில் இன்று தொடங்கியது.

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் உபகரண கண்காட்சி
author img

By

Published : Jun 28, 2019, 12:42 PM IST

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மாநகராட்சி சார்பில் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் உபகரணங்களின் கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் வீடுகள், நிறுவனங்களில் தினமும் உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க சிறிய அளவிலான உபகரணம் முதல் பெரிய வகையிலான உபகரணம் வரை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் உபகரண கண்காட்சி

இந்த கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி மாணவ - மாணவிகள் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

Intro:குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் உபகரணங்கள் அடங்கிய கண்காட்சி திருச்சியில் தொடங்கியது

Body:திருச்சி திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பைகளை உரமாக்கும் உபகரண கண்காட்சி தொடங்கியது.
வீடுகள் மற்றும் இதர நிறுவனங்களில் தினமும் உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க சிறிய அளவிலான உபகரணம் முதல் பெரிய வகையிலான உபகரணம் வரை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
உயிரி எரிவாயு தயாரிப்பு கருவிகள், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் கருவிகள், மழை நீர் சேகரிப்பு முறைகள், மாடி தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்கும் துணிப்பைகள் ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் 40 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

Conclusion:இந்த கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.