திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வருவாய்த்துறை சார்பில், சிறப்பு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி விராலிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். மேலும் மணப்பாறை வட்டாட்சியர் லஜபதிராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், மண்டல துணை வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகர், ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா பண்ணப்பட்டி மேல்பாகம், இனாம் ரெட்டியபட்டி, மொண்டிபட்டி, அயன்ரெட்டியபட்டி, புத்தாநத்தம் உள்ளிட்ட 22 கிராமங்களைச் சேர்ந்த 239 பயனாளிகளுக்கு 47 லட்சத்து 80ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினர்.
இதையும் படிங்க: சேலத்தில் மிதிவண்டி பரப்புரை பேரணி நடத்திய திமுக