ETV Bharat / state

கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் நீதிமன்றத்தில் சரண்! - நீதிபதி உத்தரவு’

திருச்சி: ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் திருச்சியில் சரணடைந்தனர்.

four-persons-involved-in-murder-case-surrender-to-trichy-police

author img

By

Published : Sep 2, 2020, 6:45 PM IST

ராமநாதபுரம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவில் இருதரப்பினருக்கு இடைய தகராறு ஏற்பட்டது. இதில் முன்விரோதம் காரணமாக அருண் பிரகாஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரத்தைச் சேர்ந்த லெப்ட் சேக், சதாம், அஜீஸ், காசிம் ரஹ்மான் ஆகிய நான்கு பேர் திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 2) சரணடைந்தனர்.

கொலை வழக்கில் சரணடைந்த நான்கு பேரையும், 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நான்கு பேரும் லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:விழுப்புரத்தில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் கேன்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.