வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்களை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் நேற்றும், இன்றும் சிறப்பு முகாம்கள் நடந்துவருகிறது.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்த வகையில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அதிமுகவினர் சார்பில் 74 மையங்களில் வாக்காளர் சேர்ப்பு மும்முரமாக நடத்தி வருகின்றனர். ன்று திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி பார்வையிட்டார்.
அங்கு வாக்காளர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு முகாமையும் பரஞ்சோதி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது சட்டப்பேரவை உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து துறையூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சில வாக்குச்சாவடி மையங்களை பரஞ்சோதி பார்வையிட்டார்.
இதையும் படிங்க:சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்!