ETV Bharat / state

"யாரும் அதிமுகவினரை மிரட்ட முடியாது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவினரை யாரும் மிரட்ட முடியாது எனவும், ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் வாயை மூட முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கையெழுத்திட வந்த ஜெயக்குமார்
கையெழுத்திட வந்த ஜெயக்குமார்
author img

By

Published : Mar 16, 2022, 2:08 PM IST

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டரை தாக்கியது உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதானார்.

ஜாமீனில் வெளி வந்துள்ள அவர், திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2ஆவது முறையாக இன்று (மார்ச். 16) கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலா முரளிதரன் முன்னிலையில் ஜெயக்குமார் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக அமைச்சர்கள் மீதும் கழக முன்னோடிகள் மீதும் வழக்குகள் போட்டு மிரட்டி பார்க்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ளனர். அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குகளை போட்டு பணம், நகை ஏதும் கைப்பற்றாமல், அதை கைப்பற்றியதாக குறிப்பிடுவது பொய்" என்றார்.

கையெழுத்திட வந்த ஜெயக்குமார்

ஜாமினில் வெளிவந்த ஜெயக்குமார் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருவதாக திமுக ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதற்கு பதிலளித்த அவர், "நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திடுகிறேன். நான் பேட்டி கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஜெயக்குமார் வாய மூட முடியாது. அதேபோல் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயை மூட முடியாது" என்றார்.

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் என குறிப்பிடுகிறார்களே என்பதற்கு பதிலளித்த அவர், "இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் இதுதான்" என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அழகு நாயகன் அஸ்வின் க்ளிக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.