திருச்சி விமானநிலையத்தில், திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது திருவாரூரைச் சேர்ந்த நூருல் அமீன் என்ற இளைஞர் தனது கால் சட்டையில் வைத்து இந்திய ரூபாயில் 4.80 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியாலை மறைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.