பலகாரம் தயாரிப்பு குறித்து திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சித்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. பலகார வகைகள், இனிப்பு வகைகள், கார வகைகள், கேக்குகள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை மக்கள் அதிக அளவில் வாங்குவார்கள்.
அதனால் உணவுப் பொருட்களைச் செய்யும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கல்யாண மண்டபம், வீடுகளில் மொத்த ஆர்டர் பெற்று இனிப்பு, கார வகைகளை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயார் செய்ய வேண்டும் என்றார்.
மேலும், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006இன்படி உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் உரிம சான்றுகளை கட்டாயம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: