திருச்சி: திருவம்பூர் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் கிருத்திக் (5) இன்று (ஏப். 17) பள்ளி விடுமுறை என்பதால் தொட்டியம் பகுதியில் உள்ள அவரது தாய் மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பண்ணை குட்டை அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தவறி குட்டைக்குள் விழுந்துள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், உயிரிழந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசர் மருத்துவமனைக்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டு உடர்கூறாய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்திற்கு பண தராத விரக்தியில் இளைஞர் தற்கொலை