திருச்சி மாவட்டம் மணப்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய காவல்துறையினர், அங்ககிருந்த 355 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து நிகழ்விடத்திலேயே அழித்தனர்.
இரண்டாவது நாளாக மேற்று (மே 29) காவல் துறையினர் நடத்திய ஆய்வில், மேல தொப்பம்பட்டியிலுள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி 100 லிட்டர் சாராயம், ஊறல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றையும் கைப்பற்றி காவல்துறையினர் அழித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி (33), செல்வம் மகன் பொன்னுச்சாமி (28), சின்னப்பன் மகன் அழகர்சாமி (26), செட்டியப்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் ராமராஜன் (25) ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து இரண்டு இருச்சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.