திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 50 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வுக்குக் காரணமான திமுக அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக திருச்சி ரயில்வே சந்திப்பு எதிரே நேற்று (ஏப்.05) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எதிர்கட்சி தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மீது சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், உத்தரவிற்கு கீழ்படியாமை, பொதுப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனமுவந்து சொத்துவரியை உயர்த்தவில்லை ஸ்டாலின்; வாக்களித்த மக்களுக்குப் பரிசாக சொத்து வரி உயர்வு - இது ஈபிஎஸ்!