ETV Bharat / state

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு திருச்சியில் பாராட்டு விழா - Gomathi Marimuthu

திருச்சி: ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு திருச்சியில் கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தினர்.

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு திருச்சியில் பாராட்டு விழா
author img

By

Published : Apr 29, 2019, 10:43 PM IST

கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், திருச்சி முடிகண்டம் பகுதியை சேர்ந்த கோமதி கலந்துக் கொண்டார். இதில், மகளிர் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடித் தந்தார்.

தனது சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பிய கோமதிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கார் மூலம் முடிகண்டம் கிராமத்திற்குச் சென்றார். அங்கும் முடிகண்டம் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் கூடி நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோமதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Intro:ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு திருச்சி கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தினார்.

Body:திருச்சி:
தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு திருச்சியில் கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தினர்.
கத்தார் நாட்டில் நடந்த ஆசிய தடகள போட்டியில் திருச்சி மணிகண்டம் அருகே முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி கலந்து கொண்டார். இவர் 800 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தங்கப்பதக்கத்துடன் சென்னை திரும்பிய கோமதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று பேண்டு வாத்தியம் முழங்க கோமதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் கார் மூலம் முடிகண்டம் கிராமத்திற்குச் சென்றார். அங்கும் முடிகண்டம் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் கூடி நின்று வரவேற்பு அளித்தனர்.
இதனால் பாராட்டு மழையில் கோமதி சிக்கித் தவித்தார். இந்நிலையில் இன்று காலை திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோமதிக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜசேகரன், இயக்குனர் பாலகிருஷ்ணன், முதல்வர் பாரதிராஜா, ரெட் கிராஸ் அமைப்பைச் சேர்ந்த மோகன், கராத்தே வீரர் டிராகன் ஜெட்லீ, பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டு பாராட்டினர். இந்த விழாவில் "ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்" சார்பில் உலக சாதனைக்கான சான்றிதழ் கோமதிக்கு வழங்கப்பட்டது. மேலும் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கோமதியை நேரில் சந்தித்து வாழ்த்தினர். தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு திருச்சியில் நடந்த முதலாவது பாராட்டு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:இந்த விழாவில் கோமதிக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.