ETV Bharat / state

மணப்பாறை சந்தையில் மந்தமான ஆடு விற்பனை..! வடகிழக்கு பருவமழையால் வர்த்தகம் பாதிப்பு..? - latest news in tamil

Manapparai goat Market: தீபாவளியை முன்னிட்டு மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ஆடுகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும் அதிக விற்பனை நடைபெறாததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

manapparai goat market
மணப்பாறை சந்தையில் மந்தமான ஆடு விற்பனை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 6:22 PM IST

மணப்பாறை சந்தையில் மந்தமான ஆடு விற்பனை

திருச்சி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ஆடுகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும் அதிக விற்பனை நடைபெறாததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் மிகவும் புகழ்பெற்ற மணப்பாறையில், ஆட்டுச்சந்தை இன்று நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்திருந்தனர். இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை துவங்கி புதன் கிழமை பிற்பகல் வரை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் அதிகளவில் விற்பனையாகும் என்பதால் தங்களது ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என எண்ணி ஆடு வளர்ப்பவர்கள், ஆடுகளை விற்பனை செய்வதற்காக அதிகளவில் மணப்பாறை சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இன்று காலை நடைபெற்ற சந்தைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்ததால் அதன் விலை கணிசமாகக் குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், தீபாவளி பண்டிகைக்காக அதிகளவில் ஆடுகள் வாங்குவதற்காகத் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெருமளவில் வியாபாரிகளும் வந்திருந்தனர்.

வியாபாரிகள் கவலை: தீபாவளிக்கு 4 நாட்களே இருப்பதால் ஆடுகளுக்கு மழை நேரத்தில் மேய்ச்சல் பாதிக்கும், நோய் தாக்கும் அபாயம் உள்ளதாலும், வளர்ப்புக்காக ஆட்டை வாங்கி செல்லும் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே சந்தைக்கு வருகை தந்தனர்.

வழக்கமாகத் தீபாவளிக்கு முன்பு நடைபெறும் சந்தையில் சுமார் 1 கோடியிலிருந்து 2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 50 லட்சத்திற்கும் குறைவாக மட்டுமே விற்பனை நடைபெற்றதால் பலரும் ஆடுகளை மீண்டும் கொண்டு சென்றனர்.

இதனால் தீபாவளியையொட்டி அதிக விலைக்கு விற்பனையாகும் என்று வந்த ஆடு வளர்ப்போருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் இப்பகுதி விவசாயிகளுக்குப் பலன் அளிக்காத நிலையில், சிறிய அளவில் பெய்து வரும் சாரல் மழையால் கால்நடைகள் விற்பனை பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் விவசாயிகளுக்குத் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது கானல் நீராக அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காற்று தரக் குறியீடு என்றால் என்ன? - டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாடு எந்த வகையில் உள்ளது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.