ETV Bharat / state

பாஜகவுடன் போர் செய்யும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் கிடையாது - கே.எஸ்.அழகிரி

பாஜகவுடன் போர் செய்யும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் கிடையாது அவர் பாஜகவிற்கு கட்டுப்பட்டுத் தான் இருப்பார் என கே.எஸ்.அழகிரி கூறினார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 1, 2023, 6:19 PM IST

பாஜகவுடன் போர் செய்யும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் கிடையாது - கே.எஸ்.அழகிரி

திருச்சி: காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் இல்லத்திற்கு , காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் வந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர் கே.எஸ். அழகிரி, "நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்து தவறான வீடியோவை அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு அரசியலில் காமராஜர் காலத்திலிருந்து எதிரும் புதிருமான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், பழிவாங்கும் அரசியல், கேவலமான அரசியல், பிளாக் மெயில் செய்யும் அரசியல் என்பது பா.ஜ.க வந்த பிறகு, குறிப்பாக அண்ணாமலை வந்த பிறகு தான் நடக்கிறது.

நிதியமைச்சர் பண்பான குடும்பத்தில் பிறந்தவர். அவரை மையப்படுத்தி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தவறான குற்றச்சாட்டை வைப்பது கேவலமானது. கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம். அரசாங்கத்தையும் அதன் நடைமுறையினையும் விமர்சிக்கலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் அண்ணாமலை செய்வது போல் ஒரு செயலை செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த கலாசாரத்தை காங்கிரஸ் கட்சி வெறுக்கிறது. அண்ணாமலை பேராண்மையோடு அரசியல் செய்ய வேண்டும். அவருடைய கொள்கையைக் கூறி அவரின் கட்சியை வளர்க்க வேண்டும். பிறர் மீது பழி கூறி, சேற்றை வாரி இறைக்கக் கூடாது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. ராகுல் காந்தியின் நேர்மறையான அரசியல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது.

அங்கு ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கும், கார்கேவின் பிரசாரத்திற்கும் மக்கள் அதிக அளவில் வருவது ஒரு நல்ல அறிகுறியாக உள்ளது. இந்திய ஜனநாயகம் மிகவும் வலிமையானது. அவதூறுகளை கூறி அதை முடக்க முடியாது. ராகுல் காந்திக்கு எதிராக போடப்பட்ட வழக்கும் சரி, கார்கேக்கு எதிராக பா.ஜ.கவினர் கூறும் குற்றச்சாட்டும் சரி, இந்திய ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கார்கேவின் பரப்புரையையும் ராகுல் காந்தியின் பரப்புரையையும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்கிற அச்சத்தால் பாஜகவினர் இது போல் பேசுகிறார்கள். இதுவே நமக்கொரு வெற்றி. இந்திய ஜனநாயகம் ஒரு பொழுதும் இது போன்ற அவதூறுகளை அனுமதிக்காது, அவர்களின் குற்றச்சாட்டுகளை தகர்த்து எறியும். கலைஞருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது எப்படி தவறாகும்.

மராட்டியத்தில் சிவாஜிக்கு கடலுக்கு நடுவே சிலை வைக்கிறார்கள். அதை நாம் வரவேற்கிறோம். அதே போல தமிழ்நாட்டில் எளிமையான குடும்பத்தில் பிறந்து மிகவும் உயர்ந்த இடத்தை அடைந்த கலைஞருக்கு நினைவுச் சின்னம் அமைக்க உள்ளார்கள்; அதில் எந்த தவறும் இல்லை.

கடலுக்கு அடியில் பொருட்காட்சியே நடத்துகிறார்கள். அதற்கும் அனுமதி தருகிறார்கள். மறைந்த தலைவரை எல்லோரும் சேர்ந்து மதிக்க வேண்டும். மக்கள் அவரை ஏற்றுக்கொண்டதால் தான் ஐந்து முறை முதலமைச்சர் ஆனார். அவருக்கு நினைவுச்சின்னம் வைப்பது தமிழர்களுக்கான பெருமை. கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மதிக்கப்படாமல் இருந்தபோது அண்ணாமலை வாய் மூடி மெளனியாக இருந்தார்.

அதைக் கூட செய்யாதவர், நாங்கள் அதிக வாக்கு வாங்கி பெற்று வெற்றி பெறுவோம் எனக் கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது. பா.ஜ.க வுடன் போர் செய்யும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தைரியமானவர் கிடையாது. அவர்களுக்குள் பனிப்போரும் நடக்காது, வெயில் போரும் நடக்காது. பா.ஜ.க விற்கு கட்டுப்பட்டு தான் எடப்பாடி பழனிசாமி இருப்பார். தொடர்ந்து தோல்வி அடைவார், அந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்’’ எனப் பேசினார்.

இதையும் படிங்க: ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு: மானியத்தில் ட்ரோன் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.