ETV Bharat / state

"ஆர்எஸ்எசின் பிரசார பீரங்கி ஆளுநர் ரவி" - துரை வைகோ! - soldier controversy talk

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அறிவிக்கப்படாத பிரசார பீரங்கியாக செயல்படுகிறார் என தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

துரை வைகோ குற்றச்சாட்டு
துரை வைகோ குற்றச்சாட்டு
author img

By

Published : Feb 23, 2023, 8:50 AM IST

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அறிவிக்கப்படாத பிரசார பீரங்கியாக செயல்படுகிறார்

திருச்சி: மதிமுக நிர்வாகி ரயில்வே ஊழியர் செழியன் பணி ஓய்வு விழாவில் கலந்து கொள்ள மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு ஆளுநர் ரவி திராவிட சித்தாந்தங்கள் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் அரசியலை கடந்து, மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.

தற்போது ஆன்லைன் சூதாட்டத்தால், பணத்தை இழந்தவர்களில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தமிழ்நாடு அரசு அதற்கான சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு ஆளுநருக்கான அடிப்படை கடமைகள் கூட தெரியாமல் செயல்பட்டு வருகிறார். தேவையில்லாமல் அரசியல் பற்றிய கருத்துக்களையும், திராவிட சித்தாந்தங்கள் பற்றிய கருத்துக்களையும் பேசி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அறிவிக்கப்படாத பிரசார பீரங்கியாக செயல்படுகிறார்.

தேர்தலில் பணம் கொடுக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். யார் பணம் கொடுத்தாலும், மக்கள் முடிவு எடுத்து விட்டால் அதை மாற்றும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. யாராலும் மாற்ற முடியாது. கடந்த காலங்களில் தேர்தல் முடிவு எப்படி இருந்தது என்பது தெரியும். தேர்தலுக்காக, பணம் கொடுத்தவர்களில் பலர் தோற்றுள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் தான் ஈரோடு இடைத்தேர்தலில், எழுந்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராணுவ வீரராக இருப்பவர் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டியவர். ஆனால், எங்களுக்கு சுடத் தெரியும். குண்டு வைக்கத் தெரியும் பகிரங்கமாக சொன்னவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். வன்முறையை துாண்டும் வகையில் பேசிய அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று துரை வைகோ தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈபிஎஸா! ஓபிஎஸா! - அதிமுக யாருக்கு? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.