ETV Bharat / state

திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு தொடக்கம்: ஸ்டாலின் தலைமையேற்பு

திருச்சி: திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Jan 31, 2020, 2:21 PM IST

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். திமுக சார்பில் மட்டும் சுமார் 6,500 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வெற்றிபெற்றுள்ளனர்.

மாநாட்டுப் பந்தல்
மாநாட்டு பந்தல்

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

திருச்சியில் திமுக மாநாடு
மாநாட்டுப் பந்தல்
மாநாட்டு பந்தல்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி மாநாட்டைத் தொடங்கிவைத்த நிலையில், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு வரவேற்புரையாற்றினார். விழாவில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ‘மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு மோடியும் எங்க டாடியும் தான் காரணம்’ - உதயநிதி

Intro:Body:

Parliment live 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.