ETV Bharat / state

திமுக தலைவர்கள் யாரையும் கண்டு எப்போதும் பயப்பட்டதே கிடையாது - அமைச்சர் உதயநிதி பேட்டி

திமுக தலைவர்கள் யாரையும் கண்டு எப்போதும் பயப்பட்டதே கிடையாது என திருச்சியில் அமைச்சர் உதயநிதி பேட்டியளித்துள்ளார்.

திமுக தலைவர்கள் யாரையும் கண்டு எப்போதும் பயப்பட்டதே கிடையாது-  திருச்சியில் அமைச்சர் உதயநிதி பேட்டி
dmk-leaders-were-never-afraid-of-anyone-minister-udayanidhi
author img

By

Published : Jul 7, 2023, 3:58 PM IST

திருச்சி: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள(கோர்ட் யார்ட்) நட்சத்திர ஹோட்டலில் உணவு அருந்திய பின்னர் விமானம் மூலம் சென்னை சென்றார்.

முன்னதாக திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள கோர்ட் யார்ட் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ''என்ன பார்த்தா பயந்த மாதிரியா... உங்களுக்கு தெரிகிறது?'' என செய்தியாளர்களைப் பார்த்துக் கேட்டார்.

இதையும் படிங்க :Rahul Gandhi: ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மீதான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

''எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அப்படித்தான் பேசுவார். யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்குத் தெரியும். ஏன் உலகத்திற்கே தெரியும். பாஜகவிற்கு அடிமை அதிமுக தான் என்று. எங்களுடைய தலைவர்களான கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது'' என்றார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் கர்நாடகாவில் தண்ணீர் குறித்து தமிழக முதலமைச்சர் கேட்டுப் பெற்று தருவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, கண்டிப்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும்; திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது என்றும், ராகுல் காந்தி குறித்த செய்திகளைப் பார்க்கவில்லை என்றார்.

ஆளுநர் இன்று டெல்லி செல்கிறார் என்ற கேள்விக்கு, அவருக்கு வேறு வேலைகள் இல்லை என்றும்; அதனால்தான் டெல்லி சென்று சென்று வருகிறார் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

இந்நிகழ்வின் போது தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க :அதிமுக அமைச்சர்களை காப்பாற்ற ஆளுநர் தந்திரமாக செயல்படுகிறார் - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.