ETV Bharat / state

திமுகவில் பல அவமானங்களைச் சந்தித்தேன் - கண்கலங்கிய கே.என். நேரு - திமுக கட்சிக்குள் சாதி பார்க்க வேண்டாம்

திருச்சி: பல அவமானங்களைச் சந்தித்துதான் முதன்மைச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளேன் என்று முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கண்கலங்கியபடி கூறியது திமுகவினரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

k.n.nehru
k.n.nehru
author img

By

Published : Feb 24, 2020, 5:13 PM IST

திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, புதிதாக நியமனம்செய்யப்பட்ட திருச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தியாகராஜன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலங்களாக இணைக்க வேண்டும். ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உள்கட்சித் தேர்தலைச் சிறப்பாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கூட்டத்தில் கே.என். நேரு பேசுகையில், "மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு பல அவமானங்களைச் சந்தித்துள்ளேன். அதனால்தான் தற்போது முதன்மைச் செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளேன் (அவ்வாறு பேசும்பொழுது கே.என். நேரு கண் கலங்கினார்).

கட்சியினர் மத்தியில் சாதியை பார்க்காதீர்கள். கட்சி வளர்ச்சிக்குத் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். சிறுபான்மை, பட்டியலின கட்சித் தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். என்ன வருத்தங்கள் இருந்தாலும் அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றிபெற வேண்டும்" என்றார்.

திமுக கூட்டத்தில் கண் கலங்கிய கே.என். நேரு

மேலும், தான் என்ன தவறு செய்திருந்தாலும் தன்னை மன்னித்துவிடுமாறு உருக்கமாகச் சொன்ன நேரு. கட்சி தோழர்களோடு எப்போது அரவணைப்போடு இருந்தாலும் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பாக இருக்கும் எனவும் தனது அனுபவத்தை கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரையாக உரைத்தார்.

இதையும் படிங்க: சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் எதிர்ப்பு மாநாடு - நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.