ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சியில் வாழ்வாதாரமின்றி தவித்து வந்த ஏழை, எளிய மக்கள் ஐந்தாயிரம் பேருக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு ஐந்து கிலோ அரிசி உள்ளிட்ட உணவு தொகுப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாநகர செயலாளர் அன்பழகன், ஊராட்சி குழுத் தலைவர் தர்மன், மாவட்ட துணை செயலாளர் துரை கந்தசாமி, அந்தநல்லூர் ஒன்றிய குழுத் தலைவர் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கால் கடுக்க நடந்து சென்று பூர்வகுடிகளுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்!