விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
திமுக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், பார்வார்டு பிளாக் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி முடிவு