ETV Bharat / state

அதிமுக அரசின் வழியை பின்பற்றுவோம்: தேமுதிக வேட்பாளர் - இளங்கோவன்

திருச்சி: பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஆளும் அதிமுக அரசின் வழியை பின்பற்றுவோம் என திருச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி தேமுதிக வேட்பாளர்
author img

By

Published : Mar 19, 2019, 4:28 PM IST

அதிமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

அவருக்கு தேமுதிகவினர், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் என்னை வேட்பாளராக அறிவித்தார். அந்த மகிழ்ச்சியை விட தற்போது திருச்சி மாநகரம் சார்பில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

கூட்டணி தலைவர்களுடன் ஆலோசித்து தேர்தல் பிரச்சாரம் குறித்து முடிவு செய்யப்படும். திருச்சி முன்னேற்றத்தை முன்னிறுத்தி நிச்சயமாக பிரச்சாரத்தை மேற்கொள்வேன். ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த அரசாங்கத்தின் வழியை நாங்கள் பின்பற்றுவோம் என அவர் தெரிவித்தார்.

Intro:திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

Body:திருச்சி: திருச்சியின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் கூறினார்
அதிமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு தேமுதிகவினர் வரவேற்பளித்தனர். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் என்னை வேட்பாளராக அறிவித்தார். அந்த மகிழ்ச்சியை விட தற்போது திருச்சி மாநகரம் சார்பில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு வரவேற்புக்காக நான் தேமுதிக தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் கடமைப்பட்டுள்ளேன்.
கூட்டணி தலைவர்களுடன் ஆலோசித்து தேர்தல் பிரச்சாரம் குறித்து முடிவு செய்யப்படும். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பிரச்சாரம் தொடங்கப்படும். 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். திருச்சி முன்னேற்றத்தை முன்னிறுத்தி நிச்சயமாக பிரச்சாரத்தை மேற்கொள்வேன். ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த அரசாங்கத்தின் வழியை நாங்கள் பின்பற்றுவோம் என்றார்.

Conclusion:கூட்டணிக் கட்சியினரை ஆலோசித்து பிரச்சார யுக்தி குறித்து முடிவு செய்யப்படும் என்று தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.