தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 67ஆவது பிறந்தநாளை அவரது தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். அதன் ஒரு அங்கமாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தேமுதிக நகர, ஒன்றிய கழகம் சார்பில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வின் போது சொக்கம்பட்டியைச் சேர்ந்த கலைவாணன் உடல் தானம் செய்வதற்கு பதிவு செய்து கொண்டனர்.
இந்நிகழ்வு முடிந்த பின்னர் காட்டுப்பட்டி, மேட்டுக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள சிறப்பு இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுத்தும் அன்னதானம் அளித்தும் விஜயகாந்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.