திருச்சி : திருச்சியில் கலைஞர் அறிவாலயம் அதகளப்பட்டது. கூட்டணிக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர அனைவரையும் டைனிங் டேபிளில் உட்கார வைத்து உபசரிப்பு நடக்க, ஒரு கட்சிக்கு ஒருவர் என ஒருவர் பின் ஒருவராக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மாவட்டச்செயலாளர்களிடம் ஆரம்பம் முதலே கறார் காட்ட ஆரம்பித்த நேரு, எங்கிட்ட இவ்வளவுதான் இருக்கு... நான் என்ன செய்ய முடியும் என நேரு மீசையை முறுக்க, அன்பில் மகேஷ் ஆசையாய் சிரிக்க... காங்கிரஸுக்கு 5 என்றும், மதிமுகவிற்கு 2 என்றும், கம்யூனிஸ்ட்களுக்கு தலா 2 என்றும், விடுதலை சிறுத்தை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என முடிவாகி இருக்கிறதாம் கூட்டணி பேரம்...!
’இதயத்தில் இடமுண்டு..!’கலைஞர் பாணியில் கலாய்
ஆரம்பத்தில் 50 இடத்துல நாங்க போட்டி போடுறோம், மீதியை பிரிச்சு தர்றோம்னு சொன்னிங்களே என ஒரு கட்சியின் மாவட்டச்செயலாளர் கேட்க ,நீ நிக்கிறியா சொல்லு உனக்கே கொடுத்துடுறேன் என்றிருக்கிறார் மீசையை வருடியபடி.
ரொம்பவும் தொல்லை கொடுத்தவருக்கு மக்கள் நலக்கூட்டணியில் எப்படி அங்கம் வகித்தீர்களோ அதே அளவில் பிரித்து கொடுத்திருக்கிறோம் என சொல்லியிருக்கிறார். மீறி மல்லுக்கு நின்றவர்களிடம் கலைஞர் பாணியில் இதயத்தில் இடமுண்டு என கூலாக சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார். ஆக திருச்சியைப்பொறுத்தவரை முந்தைய கூட்டணி சுமுகமாக முடிவிற்கு வந்ததாகவேத் தெரிகிறது.
இதையும் படிங்க:அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு- மேலும் ஒரு மனு தாக்கல்