திருச்சி: கொட்டப்பட்டு அகதிகள் முகாமிலுள்ள இலங்கை நாட்டு கைதிகளைப் பார்க்க சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலர்கள் மூன்று பேர் இன்று (ஜனவரி 7) சென்றனர்.
இதனிடையே திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ். சிவராசுவிடம் அனுமதி கேட்காமல் கைதிகளைப் பார்க்க அலுவலர்கள் சென்றதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், "இலங்கை சிறப்பு முகாமில் தங்களுடைய பிரஜைகளைச் சந்திக்க விரும்பியது உண்மைதான்.
ஆனால், அது சிறப்பு முகாம் மட்டுமல்லாமல் அங்கே குற்றம்புரிந்தவர்கள் தனியாக அடைக்கப்பட்டுள்ளதாலும், மாநில அரசின் பொதுத் துறையிடம் அனுமதி பெறாததாலும், நாங்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை" என்றார்.
இந்தியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்கள் உள்பட சுமார் 160 வெளிநாட்டினர் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Covid Guidelines: காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள்