ETV Bharat / state

கோயில்களில் கொரோனா கட்டுப்பாடு ? - ஆலோசித்து வருவதாக அமைச்சர் தகவல் - ஸ்ரீரங்கம் கோவில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு

கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் எனவும், சூழ்நிலைக்கு தகுந்தார் போல் முடிவு எடுக்கப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Etv Bharatகோயில்களில் கொரோனா கட்டுப்பாடு  குறித்து  முதலமைச்சர் ஆலோசனை - அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Dec 24, 2022, 1:24 PM IST

Updated : Dec 24, 2022, 1:41 PM IST

கோயில்களில் கொரோனா கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் ஆலோசனை - அமைச்சர் சேகர்பாபு

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22அம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார்.

முன்னதாக கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, உற்சவர் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு தாயார் சன்னதியில் தரிசனம் செய்ய உள்ளே சென்றவுடன் தாயார் சன்னதி கதவை மூடிவிட்டனர். தாயாரை தரிசனம் செய்ய வந்த பக்தர்களை உள்ளே விடாமல் 9 மணிக்கு மேல் வாருங்கள் நடை சாத்தபட்டது என கூறி பக்தர்களை அனுப்பி வைத்த கோவில் பணியாளர்களால் பக்தர்கள் ஏமாற்றதுடன் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘திருக்கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் பக்தர்களுக்கு தேவையான வசதியை மேற்கொள்வது குறித்த முதலமைச்சரின் உத்தரவிற்கு ஏற்ப திருவிழா காலம் குறித்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்ததாகவும், வைகுண்ட ஏகாதேசி முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி என்று நடைபெற உள்ளது அன்று செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஏற்கனவே விரிவான அறிக்கை தாக்கல் மாவட்ட ஆட்சியரின் சார்பில் அழைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள்: மேலும் கூறுகையில், ‘கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.40 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் உருவாக்கப்பட உள்ளது.அறநிலை துறையை சேர்ந்த 3 இனை ஆணையர்கள் கூடுதலாக இந்த திருவிழாவில் பனியில் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

மூன்றாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்..சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வின்போது பொது தரிசனத்தில் வருபவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் தான் ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படுகிறது - அந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி ஒரு சல்லி பைசா கூட வசூல் செய்யப்பட மாட்டாது அதில் எவ்வித விதி மீறல்களும் நடைபெறாது என்றார்.

கரோனா கட்டுப்பாடுஅதேபோல் அன்றைய தினம் வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்களும் கலந்து கொள்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்வதற்கு கோயில் இணைய ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.கொரோனா பரவல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கோவில்களில் கட்டுப்பாடுகள் குறித்து சூழ்நிலைக்கு தகுந்தார் போல் முடிவு எடுக்கப்படும் என்றார்முடிவில் இந்து சமய அறநிலை துறையின் சார்பில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நபர்களான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் - இராமநாதபுரம் கோவில் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த முருகானந்தன் திருச்சி உத்தமர் திருக்கோவிலில் ஓதுவாராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பாஜக எங்குள்ளது.. மொத்த உறுப்பினர்கள் எவ்வளவு.. கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி..

Last Updated : Dec 24, 2022, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.