திருச்சி சுப்புரமணியபுரம் ஜெயில் கார்னர் பகுதியில் வேலன் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் செயல்படும் கேன்டீனுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம் அப்பகுதியில் உள்ளது.
சமையல் கூடத்தில் எதிர்பாராவிதமாக ஒரு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. சமையல் கூடத்திலிருந்த பொருள்கள், மேற்கூரை ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் பெண் பணியாளர் உள்பட இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நான்கு பேர் எவ்வித காயங்களுமின்றி தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கே.கே. நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.