தமிழ்நாட்டில் இன்று (செப்.17) ஒரேநாளில் ஐந்தாயிரத்து 560 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 25 ஆயிரத்து 420ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் இன்று (செப்.17), திருச்சி மாவட்டத்தில் 115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 227ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மாவட்டத்தில் 8,213 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 880 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.