தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 881 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இன்று (ஜூலை 31) திருச்சி மாவட்டத்தில் 133 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 146ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே 2 ஆயிரத்து 535 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில்; 1,551 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் தொற்று காரணமாக இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.