திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் கடந்த 17ஆம் தேதி அன்று மன்றத்தில் தியாகி கக்கன் போட்டோ திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வு முடிந்த பின்னர் தியாகி கக்கன் போட்டோவை,காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜவஹர் என்பவர் தூக்கி எறிந்து விட்டார். இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்திலும் உடனடியாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி தலையிட்டு மாவட்டத் தலைவர் ஜவஹரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கக்கனின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக அவரது படத்தை அலுவலகத்தில் வைக்க வேண்டும்; இல்லை என்றால் நாங்கள் படத்தை வைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'தவறுதலாக சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றுள்ளனர்' - மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயண பாபு