ETV Bharat / state

காயமடைந்த ஆசிரியையை தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்த திருச்சி கலெக்டர் - திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார்

விபத்திற்குள்ளான அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தனது காரில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சிமிக்க சம்பவம் நடந்தேறியுள்ளது.

காயமடைந்த ஆசிரியரை தனது காரில் ஏற்றி சிகிச்சைக்கு அனுமதித்த திருச்சி ஆட்சியர்

author img

By

Published : Dec 15, 2022, 5:28 PM IST

காயமடைந்த ஆசிரியையை தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்த திருச்சி கலெக்டர்

திருச்சி : மணச்சநல்லூர் தாலுகா திருவெள்ளரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வழக்கம்போல் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது வடக்குப்பட்டி என்ற பகுதியில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் தலைமை ஆசிரியை காயமடைந்தார்.

உடனே அந்தப் பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த வழியாக வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உடனடியாக தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை, தனது காரில் ஏற்றி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென தனது காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

இதையும் படிங்க: "உங்க கட்சியினருக்கு அறிவு இருக்கா?" விதியை மீறி பேனர் வைத்த திமுகவினரை விளாசிய அறப்போர் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.