ETV Bharat / state

6 ஆண்டுகளாக சமயபுரம் தங்கத் தேர் ஓடவில்லை: பக்தர்கள் வேதனை - திருச்சி

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த ஆறு ஆண்டுகளாக தங்கத் தேர் ஓடாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்
author img

By

Published : Jul 18, 2019, 11:05 AM IST

Updated : Jul 18, 2019, 8:00 PM IST

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் பழனி முருகன் கோயிலுக்கு அடுத்தபடியாக வருவாய் வரக்கூடிய கோயிலாக சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவந்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ரூ. 2000 கட்டணம் செலுத்தித் தங்கத் தேர் இழுத்து வந்தனர். தினமும் ஒரு சுற்றுக்கு 10 நிலைகளில் இந்தத் தேர் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் பழைய நிலையை வந்தடையும்.

ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 280 நாட்கள் தங்கத் தேர் இழுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளுக்காகத் தங்கத் தேர் நிகழ்ச்சி 2012ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. திருப்பணிகள் முடிந்து சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடந்துமுடிந்தது. ஆனாலும் தற்போது வரை தங்கத் தேர் நிகழ்வு இன்னும் தொடங்கப்படவில்லை. இது பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அமைப்பு மனு அளித்துள்ளது.

மகேஸ்வரி வையாபுரி

அந்த அமைப்பின் மகளிர் அணித் தலைவி மகேஸ்வரி வையாபுரி கூறுகையில், “தங்கத் தேர் இழுக்கப்படாததால் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் மனம் வருந்துகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக தங்கத் தேர் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இதுவரை 56 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தங்கத் தேரை விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்து பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், குடமுழுக்கு பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. ராஜகோபுர குடமுழுக்கு நிறைவடைந்த பின்னர் தங்கத் தேர் இயக்கப்படும் என்றனர். குடமுழுக்குப் பணிகளை கோயில் நிர்வாகம் காரணம் கூறினாலும் ஆறு ஆண்டுகளாக தங்கத் தேர் இழுக்கும் நிகழ்வை ரத்து செய்திருப்பதை ஏற்க முடியாது. மாற்று ஏற்பாடு செய்து தங்களை உடனடியாக தங்கத் தேர் இழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Intro:சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 6 ஆண்டுகளாக தங்கத்தேர் ஓடாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Body:குறிப்பு: கோவில் வீடியோ wrap மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது... (tn_tri_01_samayapuram_gold_chariot_issue_vis_7202533)

திருச்சி:
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. சக்தி ஸ்தலங்களில் இது மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். தமிழகத்தில் பழநி முருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக வருவாய் வரக்கூடிய கோவிலாக சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது.
இக் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ரூ. 2000 கட்டணம் செலுத்தி தங்கத்தேர் இழுத்து வந்தனர். தினமும் ஒரு சுற்றுக்கு 10 நிலைகளில் இந்த தேர் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் நிலையை வந்தடையும். இதனால் நாள் ஒன்றுக்கு 10 பக்தர்கள் தலா ரூ.2000 செலுத்தி தங்கத்தேர் இழுத்து வந்தனர்.
இதன் மூலம் கோவிலுக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 280 நாட்கள் தங்கத்தேர் இழுக்கப்பட்டு வந்தது. தினமும் இரவு 7 மணிக்கு தொடங்கும் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கூடி நின்று அம்மனை தரிசிப்பார்கள். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து தங்க தேர் நிகழ்ச்சி கடந்த 2012ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. திருப்பணிகள் முடிந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்து முடிந்தது. இன்னும் ராஜ கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் தற்போது வரை தங்க தேர் நிகழ்வு இன்னும் தொடங்கப்படவில்லை. இது பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் "இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு" இப்பிரச்சனையை கையிலெடுத்துள்ளது. சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு இந்த அமைப்பு மனு அளித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மண்டல மகளிர் அணி தலைவி மகேஸ்வரி வையாபுரி கூறுகையில்,
தங்கத்தேர் இழுக்கப்படாததால் பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் மனம் வருந்தி திரும்பிச் செல்கின்றனர். அதனால் உடனடியாக தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வு தொடங்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக தங்கத்தேர் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இதுவரை 56 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் தங்கத் தேரை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், கும்பாபிஷேக பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. குறிப்பாக தங்கத்தேர் சுற்றிவரும் பிரகாரத்தில் பக்தர்களின் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தேர் சுற்றி வர முடியாத நிலை நீடிக்கிறது. ராஜகோபுர கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் பிரகாரம் சரிசெய்யப்பட்டு தங்கத் தேர் இயக்கப்படும் என்றனர்.
கும்பாபிஷேக பணிகளை கோவில் நிர்வாகம் காரணம் கூறினாலும் 6 ஆண்டுகளாக தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வை ரத்து செய்திருப்பதை ஏற்க முடியாது. விரைந்து இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தங்களை உடனடியாக தங்கத் தேர் இழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேட்டி: மகேஸ்வரி வையாபுரி... இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மகளிர் அணி தலைவி

Conclusion:கும்பாபிஷேக பணிகளை காரணம் காட்டி 6 ஆண்டுகளாக தங்கத்தேர் நிகழ்வு ரத்து செய்து இருப்பதை ஏற்க முடியாது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
Last Updated : Jul 18, 2019, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.