இதுகுறித்து திருச்சி தனியார் ஓட்டலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை சம்பவத்தில் காவல் துறையினர் துரித முறையில் செயல்பட்டு குற்றவாளிகளைஜ்க் கண்டுபிடித்துள்ளனர். கஞ்சா விற்பனையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது. இந்த கொலை வழக்கில் குற்றவாளியான மிட்டாய் பாய் பெயரளவில் மட்டுமே இஸ்லாமியர். இஸ்லாமியர்களுக்கென சில பண்புகள் உள்ளன. ஆனால், மிட்டாய் பாயிடம் அந்தப் பண்புகள் கிடையாது” என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு குடிமகனும் பாதிக்கும் வகையிலுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகளால் இந்தியாவுக்குச் சொந்தமாக ஒரு விமான நிறுவனம் கூட இல்லாத நிலை ஏற்படவுள்ளது. நவரத்தினம் என்றழைக்கப்பட்ட மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கப்பட்டு, அதனை நம்பியுள்ள 79,000 தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த பட்ஜெட்டினால் நாட்டின் குடிமக்களுக்கு பலனில்லை” என்றார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி